உள்ளூர் செய்திகள்
வாட்ஸ்அப்

தோழியை ஆபாச படமெடுத்து வாட்ஸ்அப்பில் பதிவேற்றிய வாலிபர்- போலீசுக்கு பயந்து தலைமறைவு

Update: 2022-04-21 10:36 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தோழியை ஆபாச படமெடுத்து வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் விக்கி (எ) சிவசந்திரன் (வயது23). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இது தவறான செயல் என்று சிறுமியின் தாயார் கண்டித்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட விக்கி அந்த குடும்பத்தை பழி வாங்கும் நோக்கத்தில் தனது செல்போனில் அந்த சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைபடத்தை தயார் செய்து தன்னுடைய வாட்ஸ்அப்பில் பதிவு செய்து வைத்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியவர இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை இதுதொடர்பாக பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது பற்றி அறிந்த விக்கி போலீசின் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் (பொறுப்பு) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News