உள்ளூர் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியர் சங்கத்தினர்.

அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-21 15:39 IST   |   Update On 2022-04-21 15:39:00 IST
வேதாரண்யத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க கோரியும், தேர்தல் வாக்குறுதியை நடப்பு

சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிடவும் காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திற்கு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு ஊழியர் சங்க இணை

செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Similar News