உள்ளூர் செய்திகள்
தேவனூர் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடந்த போது எடுத்த படம்.

திருவண்ணாமலை அருகே களை கட்டிய கூத்தாண்டவர் கோவில் திருவிழா

Published On 2022-04-21 10:06 GMT   |   Update On 2022-04-21 10:06 GMT
திருவண்ணாமலை அருகே களை கட்டிய கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே தேவனூரில் 100 ஆண்டுக்கும் மேலாக மக்கள் வழிபட்டு வரும் பழமையான கூத்தாண்டவர் கோவில் உள்ளது.-இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேவனூர் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த பங்குனி மாதம் கடைசி வாரத்தில் காப்புகட்டி விழா தொடங் கியது. இதைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி காலையில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும், இரவில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு கூத்தாண்டர் தாலிகட்டும் நிகழ்ச்சியும், கரகாட்டம் மற்றும் வாணவேடிக் கையுடன் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

பின்னர் நேற்று (20&ந்தேதி) காலையில் கூத்தாண்டவர் வீதி உலா தொடங்கி மாலை 6.30 மணிவரை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதனால் திருவிழா களைகட்டி காணப்பட்டது.

தேவனூர் கூத்தாண்-டவர் கோவில் திருவிழா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது ஆகும். இவ்விழாவில் பெருமணம், மணலூர்-பேட்டை, தாங்கல், செல்லங்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்-பகுதிகளை சேர்ந்த 20&க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். 

இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்படி ஆடு, சேவல்களை காணிக் கையாக செலுத்தினர்.

மேலும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கழுத்தில் மாலை அணிந்து ஊர்வலமாக சென்றனர். இவ்விழாவில் வெரையூர் இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையில் 25 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News