உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆரணி அரசு பள்ளியில் 3 குழந்தைகளை வெறிநாய் கடித்து குதறியது

Published On 2022-04-21 15:36 IST   |   Update On 2022-04-21 15:36:00 IST
ஆரணி அரசு பள்ளியில் 3 குழந்தைகளை வெறி நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2021-22ம் ஆண்டில் ஆங்கிலம் வழியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இங்கு தற்போது 100 குழந்தைகளுக்கு 2 ஆசிரியை மட்டும் பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓரு ஆண் குழந்தையை பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை அருகிலேயே வெறி நாய் கடித்து குதறியது.

இதில் படுகாயமடைந்த குழந்தை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மேலும் நேற்று முன்தினம் ஓரு பெண் குழந்தையை மீண்டும் வெறி கடித்து குதறியது பின்னர் படுகாய-மடைந்த குழந்தையை ஆரணி அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் குழந்தைகளுக்கு உணவு உட்கொண்டிருக்கும் போது எதிர்பாரதவிதமாக ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஒரு 4 வயது குழந்தையை வெறிநாய்கள் கடித்தது.

இதில் காயமடைந்த குழந்தை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

அரசு பள்ளி வளாகத்தில் உள்ளேயே வெறிநாய் கடிப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்-கள் அச்சமடைந்துள்ளனர்.

இதில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News