உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்மாபுரம் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்மாபுரம்:
கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் அரசகுழி பேருந்து நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அகிலன் தலைமையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் குரு கலந்து கொண்டு மத்திய மோடி அரசை விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
இதில் நகர செயலாளர் ராசமுருகன், ஒன்றிய துணை செயலாளர் புரட்சி பாலா, ஈழவளவன், பாலு, மணிகண்டன், அறிவரசு, ரவி, சங்கர், குமார், அன்பு, வீராசாமி, பாலு மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.