உள்ளூர் செய்திகள்
அட்சயலிங்கசாமி கோவிலில் தெப்போற்சவம்
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் தெப்போற்சவம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சாமி கோவில் அமைந்துள்ளது.
இது மாடக் கோவில் ஆகும். சமய குரவர்களால் பாடல் பெற்ற இவ்வாலயத்தில் சித்திரை விழா கடந்த 14ம் தேதி அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது
நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக அட்சயலிங்க சுவாமி அம்பாளுடன் மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக சுவாமிகளுக்கு 11 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.