உள்ளூர் செய்திகள்
பெண் மரணம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே விபசார அழகி மர்ம மரணம்- காதலனிடம் விசாரணை

Published On 2022-04-20 13:24 IST   |   Update On 2022-04-20 13:24:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே விபசார அழகி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 25வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் இறந்து கிடந்த இளம்பெண் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த பிரியா(25) என்பதும், இவர் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விபச்சார தொழில் செய்யும் பெண் ஒருவருடன் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பிரியா மர்மமான இறந்து உள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக பிரியாவின் காதலனான காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மற்றும் பெண் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Similar News