உள்ளூர் செய்திகள்
வேப்பூர் அருகே ஒரங்கூர் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க கோட்டாட்சியரிடம் மனு
வேப்பூர் அடுத்த ஒரங்கூர் கிராமத்தினர் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
விருத்தாசலம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் ராஜ்குமார் தலைமையில், மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காசிபுயல் மற்றும் வேப்பூர் அடுத்த ஒரங்கூர் கிராமத்தினர் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் எங்கள் ஊர் ஒரங்கூரில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க பொது பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை நிறுவ அனுமதி தரவேண்டும். என மனுவில் கூறப்பட்டிருந்தது. உடன் மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மனு அளித்து விட்டுச் சென்றனர்.