உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே வி.சி.க சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியகாட்டுபாளையத்தில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியகாட்டுபாளையத்தில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பன்னீர், மாநில துணை செயலாளர் சரண், ஏழுமலை, ராம்பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.