உள்ளூர் செய்திகள்
தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டம்

தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-19 15:29 IST   |   Update On 2022-04-19 15:29:00 IST
மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்திட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மீனவ சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மண்டல் குழு பரிந்துரையின்படி மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்திட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிறுவனத் தலைவர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார்.

மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் திரு முகம், தலைமை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் சாரங்க பாணி, புதுவை மாநில அமைப் பாளர் மலையாளத்தான், நெய்தல் அரசு ஊழியர் பேரவை பொதுச் செயலாளர் செல்வம், தலைமை நிலைய செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைச் செயலாளர் ராமநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் உதயகுமார், நிர்வாகிகள் ஆனந்தராஜ், அய்யப்பன், ஸ்ரீதர், கன்னியப்பன், பாஸ்கர், பழனிவேல், பெருமாள், குணசேகரன், ரவிச்சந்திரன், மணி, ராமகிருஷ்ணன், சதீஷ், மகேந்திரன், லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். முடிவில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதமன் நன்றி கூறினார்.

Similar News