உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் நீடிப்பு- போலீசார் விசாரணை

Update: 2022-04-19 09:56 GMT
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் நீடிப்பதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.கோரமண்டல் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 44) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மஞ்சுநாத் கடந்த 14-ந் தேதி அன்று தனது நண்பர்களுடன் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்காக- வந்துள்ளார்.-பின்னர் அவர் திருவண்ணா-மலையில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி உள்ளார்.

மஞ்சுநாத்துக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு காலில் அடிபட்டு காயம் இருந்து வருவதால் அவரால் வெகுதூரம் நடக்க முடியாது என கூறப்படுகிறது. எனவே கடந்த 16-ந் தேதி மஞ்சுநாத்தை அவரது நண்பர்கள் அறையில் விட்டுவிட்டு அவர்கள் மட்டும் கிரிவலம் சென்றுள்ளனர்.

இதையடுத்து மஞ்சுநாத் மனைவிக்கு போன் செய்து “திருவண்ணாமலைக்கு சென்றும் தன்னால் கிரிவலம் செல்ல முடியவில்லை “என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

பின்னர் அவரது செல்போன் திடீரென சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. அவரது மனைவி செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்க--வில்லை. இதற்கிடையே. விடுதிக்கு வந்த அவரின் நண்பர்கள் மஞ்சுநாத்தை பல இடங்களில் தேடி பார்த்தனர்.ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் ஏந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சுநாத் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மஞ்சுநாத் கிரிவலம் செல்ல முடியாத வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதினர்.ஆனால் அவரது உடலில் காயம் இருந்ததால் சாவில் மர்மம் இருக்கலாம் என்றுஅவரது மனைவி புகார் செய்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத் கிரிவலம் செல்ல முடியாததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
Tags:    

Similar News