உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.2.50 கோடி வருமானம்

Published On 2022-04-19 09:56 GMT   |   Update On 2022-04-19 09:56 GMT
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.2.50 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு-வரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்-பட்டன. 

இதை-யொட்டி திருவண்ணாமலைக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.

பக்தர்கள் திருவண்ணா-மலைக்கு வருவதற்காகவும், இங்கிருந்து அவர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்காகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 1983 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 5 ஆயிரத்து 785 நடைகள் இயக்கப்பட்டன. 

மேலும் பக்தர்கள் சிரமமின்றி கிரிவலப் பாதைக்கு சென்று வரும் வகையில் நகரின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் சித்ரா பவுர்ணமிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.இதன் மூலம் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திற்கு மட்டும் ரூ.1 கோடியே 50 லட்சம் டிக்கெட் மூலம் வசூலாகி இருப்பது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News