உள்ளூர் செய்திகள்
விபத்து

வேப்பூர் அருகே திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

Published On 2022-04-18 11:09 GMT   |   Update On 2022-04-18 11:09 GMT
வேப்பூர் அருகே ஏ.கொளப்பாக்கம் கோமுகி ஆற்றின் அருகே நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டர் மீது மோதாமலிருக்க வேன் ஓட்டுனர் வேனை திருப்பும் போது, நிலை தடுமாறி வேன் கவிழ்ந்தது.
வேப்பூர்:

தென்காசி ஆகாஸ் நகர் பகுதியை சேர்ந்த 28 பக்தர்கள் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்காக வேனில் புறப்பட்டு சென்றனர்.

வேனை அதே பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் (வயது 56) என்பவர் ஓட்டி சென்றார். கிரிவலம் முடிந்து திருவண்ணாமலையிலிருந்து தென்காசி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏ.கொளப்பாக்கம் கோமுகி ஆற்றின் அருகே நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டர் மீது மோதாமலிருக்க வேன் ஓட்டுனர் சங்கரபாண்டியன் வேனை திருப்பும் போது, நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விட்டது.

இதில் வேனில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News