உள்ளூர் செய்திகள்
கடலூரில் வீட்டு மனைபட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
எங்களுக்கு வீடு கட்டி வாழ்வதற்கு வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குண்டியமல்லூரை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர் பால சரஸ்வதி தலைமையில் விசாலாட்சி மற்றும் பெண்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் ஏரிக்கரை ஓரமாக கடந்த 3 தலை முறையாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். தற்போது அரசு சார்பில் ஏரி வெட்டுவதற்காக வீடுகட்டிய இடத்தை காலி செய்யகோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நாங்கள் கூலி வேலை செய்து வருவதால் சொந்தமாக வீடு நிலம் எதுவும் இல்லை. எனவே எங்களுக்கு வீடு கட்டி வாழ்வதற்கு வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக பெண்கள் மனு கொடுக்க திரண்டதால் கலெக்டர் அலு வலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.