உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-18 16:35 IST   |   Update On 2022-04-18 16:35:00 IST
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கடலூர்:

டிசம்பர் 3 இயக்கம், மாற் றுத்திறனாளிகள் புதுவாழ்வு சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இடத்தில் உள்ள மனைகளில் வீடு கட்டித்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தலைவர் பொன் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் மேரி, துணை தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் அமரேசன், அறிவழகன் மற்றும் கருப்பாயி, மதுரவன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

Similar News