உள்ளூர் செய்திகள்
பஸ்க்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும், பலியான வாலிபரையும் காணலாம்.

ஊத்தங்கரை அருகே இன்று விபத்து அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மோதல் வாலிபர் பலி நண்பர்கள் 2 பேர் காயம்

Update: 2022-04-17 06:54 GMT
கிருஷ்ணகிரி செய்திகள்
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாவக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு (வயது 37). வெங்கடேஷ் (35), கோடீஸ்வரன் (35). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். லாரி டிரைவர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் பிரபு உள்பட 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பாவக்கல்லில் இருந்த அனுமன்தீர்த்தத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேலூரில் இருந்து சேலம் நோககி வந்த அரசு பஸ், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரபு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேஷ், கோடீஸ்வரன் ஆகிய இருவரையும்அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News