உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நடந்தது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளுவாநத்தம் அடுத்த சாமந்திபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 28-ந்தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது.
இதைத்தொடர்ந்து வில்வளைப்பு, ராஜசூய யாகம், பகடை துகில் அர்ஜுனன் தபசு விராட பருவம், கீசகன் கதை, கிருஷ்ணன் தூது, போத்தராஜாசங்கதி, திருமணம் கர்ணமோட்சம் ஆகிய நாடகங்கள் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று காலையில் திரவுபதி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து கோவிலின் முன்பு 60 அடி துரியோதனன் களிமண்ணால் செய்து வைத்து, பஞ்சவர்ணம் பூசி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் கோவிலின் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டு தீமிதி திருவிழாந டைப்பெற்றது.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை தர்மர் பட்டாபிஷேகமும் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.