உள்ளூர் செய்திகள்
சிறுமி நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தம்

சிறுமி திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தம்

Published On 2022-04-15 15:57 IST   |   Update On 2022-04-15 15:57:00 IST
பண்ருட்டியில் சிறுமியின் திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்திய போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் 21 வயதில்தான் திருமணம் நடத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருசூக கட்டமுத்து பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகள் லட்சுமி (வயது 17). இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் பண்ருட்டி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

இந்த தகவல் அவசர போலீஸ் 100 மூலம் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் திருமண மண்டபத்துக்கு சென்றனர். அப்போது சிறுமியின் பெற்றோரிடம் 21 வயதில்தான் திருமணம் நடத்த வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

அதனை தொடர்ந்து சிறுமியின் திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News