உள்ளூர் செய்திகள்
புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்தபுதுப்பேட்டை நண்பர்கள் நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 61). இவர் நேற்று மாலை 108 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதுபற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிவப்பிரகாசத்தை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.