உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி நகராட்சியில் சாக்கடையை சுத்தம் செய்த கவுன்சிலர்- இளைஞர்கள்

திட்டக்குடி நகராட்சியில் சாக்கடையை சுத்தம் செய்த கவுன்சிலர்- இளைஞர்கள்

Published On 2022-04-14 16:24 IST   |   Update On 2022-04-14 16:24:00 IST
அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகத்தை புறக்கணித்து இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கழிவுநீர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வார்டு கவுன்சிலர் ராஜவேல் நகராட்சி அலுவலகத்தில் பல முறை நேரில் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து சாக்கடை நீர் சாலையில் வழிய தொடங்கியது. 

கவுன்சிலர் ராஜவேல் கூறுகையில் எங்கள் வார்டுகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. எனவே இன்று முதல் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகத்தை புறக்கணித்து இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கழிவுநீர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என கூறினார்.

Similar News