உள்ளூர் செய்திகள்
அதிமுக

வடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

Published On 2022-04-14 16:03 IST   |   Update On 2022-04-14 16:03:00 IST
கடலூர் மாவட்டம் வடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ஜூஸ், வெள்ளிரிக்காய், மோர் வழங்கப்பட்டது.
வடலூர்:

வடலூர் நகர அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ஜூஸ், வெள்ளிரிக்காய், மோர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வடலூர் நகர செயலாளர் சி.எஸ்.பாபு வரவேற்றார். அண்ணா தொழிற் சங்க இணை செயலாளர் சூரியமுர்த்தி, மாவட்ட வக்கில் பிரிவு ராஜசேகர், மாவட்ட பொருளாளர் தேவநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் சுப்பிரமணியன், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் பஷ்யம், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கிருஷ்ணன், வடலூர் நகர நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி பாலு, ராஜாராமன், நடராஜ், வேல்முருகன், ராமமுர்த்தி, பக்தவச்சலம்,சேகர்,கண்ணன், செந்தமரைகண்ணன், மோகன், மல்லிகா, அம்மு மணிகண்டன், லோகு, அந்தோணி, முத்துலிங்கம் வேல்முருகன், வார்டு செயலாளர்கள் ஆனந்த், மாயவேல், செல்வராசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News