உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில்அடிப்படை வசதிகள் கேட்டு 21 கிராம மக்கள் தாசில்தார் அலுவலகத்தில் மனு
இங்கு மொத்தம் 650க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்
ஊட்டி:
கோத்தகிரி தாலுகா குஞ்சப்பனை, காக்காகுண்டு, அறையூர், அறையூர்மட்டம் ,கூவக்கரை மந்தரை, துதியரை, சுண்டபட்டி, பத்திய பாடி ,அத்திப்பாடி, வெள்ளரிக்கம்பை, பாவியூர், கோழித்துறை , அட்டாடி, மேல்கூப்பு, தாளமெக்கை, செம்மநாரை, கீழ் கூப்பு, கோழிக்கரை, அணில் காடு, புதூர் என 21 பழங்குடியினர் இருளர், குறும்பர் வசிக்கும் கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 650க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்
இக்கிராம மக்களின் பொதுவான அடிப்படை தேவைகளாக சாலை வசதி, வீடு வசதி, தெரு விளக்கு, அங்கன்வாடி புனரமைத்தல், புதிய அங்கன்வாடி, நடைபாதை புனரமைத்தல், புதிய நடைபாதை தண்ணீர் வசதி, உறிஞ்சு குழாய் சமுதாயக்கூடம் சீரமைத்தல், புதிய சமுதாயக்கூடம், கழிவுநீர் வாய்க்கால், கழிவுநீர் வாய்க்கால் சீரமைத்தல் சாலை வசதி, சாலை புனரமைத்தல், தெரு விளக்கு, தண்ணீர் தொட்டி கட்டுதல், பழைய தண்ணீர் தொட்டியை புனரமைத்தல், புதிய மின் இணைப்பு மற்றும் செம்மநாரை மேல் கூப்பு, தாளமெக்கை பகுதிகளுக்கு பஸ் வசதி அரசு செய்து தருமாறு 21 கிராம மக்கள் தனித்தனியாக மனு ஒன்றினை எழுதி கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் வழங்கினர்.
அப்பகுதி மக்கள் காட்டு விலங்குகள் அதிகப்படியாக உள்ளதால்தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.