உள்ளூர் செய்திகள்
தேயிலை செடிகள்

கோத்தகிரியில் தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி நோய்

Published On 2022-04-13 15:49 IST   |   Update On 2022-04-13 15:49:00 IST
நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி விநியோகம் செய்து வருகின்றனர்.
அரவேணு: 

கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி விநியோகம் செய்து வருகின்றனர்.

 தற்போது  கோத்தகிரி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு சிலந்தி நோய் தேயிலை செடிகளை பாதித்து வருகிறது.

2 மாதங்களுக்கு முன்பு பனிக்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகரித்து தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகி தேயிலை விளைச்சல் குறைந்தது இதனால் தேயிலை செடிகள் பராமரிப்பு, தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற செலவுகள் கவனிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து கோத்தகிரி தோட்டக்கலை அலுவலர் சந்திரன் கூறியதாவது:- மண்ணின் ஈரப்பதம் காக்கப்பட வேண்டும். காக்கப்பட வில்லை என்றால் சிவப்பு சிலந்தி நோயின் தாக்கம் அதிகரிக்கும். எனவே வெயில் காலங்களில் தோட்டங்களில் ஊடுபயிராக செலுத்தப்படும் மரங்களை  வெட்டக்கூடாது.

அவ்வாறு வெட்டப்படாமல் இருந்தால் செடிகளுக்கும் மண்ணுக்கும் நல்ல நிழலாகி மண்ணின் ஈரப்பதம் காக்கும். மண்ணின் ஈரப்பதம் தங்குமாறு வாய்க்கால்கள் வெட்டப்பட வேண்டும். பிப்ரவரி மாதத்தில் தெளிப்பான்கள்  தெளிக்கும் பொழுது நோயின் தாக்கம் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News