உள்ளூர் செய்திகள்
செம்மாம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் ஆய்வு செய்த காட்சி.

செம்மாம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறன் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

Published On 2022-04-13 15:47 IST   |   Update On 2022-04-13 15:47:00 IST
செம்மாம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறன் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் கல்வி வட்டாரத்திலுள்ள செம்மாம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை 146 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கான ஆண்டு ஆய்வு நடந்தது இதில் மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் வாசித்தல் திறன் எழுதும் திறன் மற்றும் கணித அடிப்படை செயல்-பாடுகள் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய-வற்றை பெரண-மல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மாணவர் களிடம் ஆய்வு செய்தார்.

முன்னதாக மாணவர்-களின் கையெழுத்து 2 வரி 4 வரி நோட்டுகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களின் ஆங்கிலம் வாசிப்பு திறன் குறித்து மாணவர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு ஆய்வு செய்தார். 

Similar News