உள்ளூர் செய்திகள்
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து குற்றம் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து குற்றம் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
சத்தியமங்கலம் உதயனூரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 29). கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் கோபிசெட்டிபாளைய த்தில் கஞ்சா விற்ற போது போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஆனந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ஆனந்தன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கான நகல் கோவை சிறையில் உள்ள ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது.
இதேப்போல் பவானி லட்சுமி நகரை சேர்ந்த நிக்கோலஸ் ராஜா (35) என்பவர் கடந்த சில மாதங் களுக்கு முன்பு நகைக்காக மூதாட்டியை கொலை செய்தார்.
இவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் நிக்கோலஸ் ராஜா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நிக்கோலஸ் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதற்கான உத்தரவு நகல் கோவையில் உள்ள சிறையில் வழங்கப்பட்டது.