உள்ளூர் செய்திகள்
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார் கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார் கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவப்பெருமாள் சன்னதி என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமையப்பெற்றுள்ளது.
இந்த கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் நடக்கும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடக்கவில்லை. இந்த நிலையில் மாவட்டத்தில் தொற்று பரவல் குறைந்ததால் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு அபிஷேகம் செய்யபட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
விழாவையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார் கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 63 நாயன்மார் களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இதனைத் தொடர்ந்து வேதநாயகி உடனமர் சங்க மேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாள் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது.
பின்னர் இரவு சங்கமேஸ் வரர் கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் மூஷிக வாகனத்திலும், சுப்பிர மணியர் மயில் வாகனத்திலும், சங்கமேஸ்வரர் நந்தி வாகனத்திலும், அம்பாள் அன்னபட்சி வாகனத்திலும், புறப்பாடு நடந்தது.
மேலும் 51 பல்லக்குகளில் 63 நாயன்மார்கள் உட்பட 91 திருமேனிகள் பக்தர்களால் திருவீதி உலா புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் அடைந்தது.
இதில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவன டியார்கள் மேள தாளங்கள் முழங்க பாடல்கள் பாடி திருவீதி உலாவில் கலந்து கொண்டனர். இதில் பலர் கலந்து கொண்டு சாமி பூஜை செய்து வழிபட்டனர். வீதி உலாவை யொட்டி போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
விழாவையொட்டி வரும் 15-ந் தேதி ஆதிகேசவப் பெருமாள் திருத்தேரோட்டம், 16-ந் தேதி சங்கமேஸ்வரர் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 19-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.