உள்ளூர் செய்திகள்
தருமபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் பெண்கள் மட்

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் சென்னகேசவப் பெருமாள் கோவில் தேரோட்டம் பெண்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்

Published On 2022-04-12 15:34 IST   |   Update On 2022-04-12 15:34:00 IST
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் ராம நவமி விழாவையொட்டி சென்ன கேசவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தருமபுரி,

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராமநவமி விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு ஆரா தனைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார சேவைகள் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து நவமி அபிஷேகமும், ஸ்ரீராமர் அவதார அலங்கார சேவையும் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்

விழாவின் முக்கிய நாளான இன்று காலை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேரைஇழுத்தனர். வாண வேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

Similar News