உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு
கூடலூர் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்த பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர்
ஊட்டி,
கூடலூர் நகராட்சியில் சொத்து வரியை உயர்த்-து-வது தொடர்பான சிறப்பு கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணை-யாளர் ராஜேஸ்-வரன், துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வு அரசாணையை நடை-முறைப் படுத்துவது குறித்து கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடைபெற்றது. முன்னதாக 9-&வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சையது அனூப்கான், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கருப்பு சட்டை அணிந்தபடி கூட்-டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் ஆணை--யாளர் பேசும்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சொத்து வரியை மாநில அரசு உயர்த்தி உள்ளது. கூடலூரில் வரியை உயர்த்துவது தொடர்பாக கவுன்சிலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.
அதற்கு அ.தி.மு.க. கவுன்-சிலர் சையத் அனூப்கான் பதிலளித்தபோது, மாநில அரசின் வரி உயர்வால் கூடலூர் பகுதியில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பொது-மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே குறைந்த சதவீதத்தில் வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
துணைத்தலைவர் சிவ-ராஜ் கூறுகையில், நகராட்சி பகுதியில் சொத்து வரியை உயர்த்த கூடாது. ஏற்கனவே சட்டப்பிரிவு 17 மற்றும் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டு உள்ள வீடுகளுக்கு கதவு எண் வழங்குவது, பெயர் மாற்றம் செய்வது ஆகிய பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
தி.மு.க. கவுன்சிலர்கள் சத்தியன் மற்றும் இளங்கோ பேசும்போது, பொது-மக்களை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட சதவீதம் வரியை உயர்த்த வேண்டும் என்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.
முடிவில் 10 முதல் 35 சதவீதம் வரை வரியை உயர்த்தலாம் என்று பெரும் பான்மையான கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர். ஆனால் அ.தி.மு.க. கவுன்சிலர் சையத் அனூப்கான் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.