உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க.- பா.ஜ.க. கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது
அரவேணு,
கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஜெயகுமாரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உமாநாத் போஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மணிகண்டன் வரவேற்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்களும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டவுடன், த.மா.கா. கவுன்சிலர் மனோஜ் காணி எழுந்து நின்று பேசினார். அப்போது அவர், சொத்து வரி உயர்வு ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே அதை ரத்து செய்ய வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
மேலும் தரையில் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தார். அவருடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நஞ்சு சுப்பிரமணி, மணி, ராஜேஸ்வரி வடிவேல், பா.ஜ.க. கவுன்சிலர் மோனிஷா ஆகியோரும் தரையில் அமர்ந்தனர். மேலும் கோரிக்கையை ஏற்காததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததுடன், கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நடந்த கூட்டத்தில் வீடு-களுக்கு 600, 800, 1,400 சதுர அடி என பிரித்து அதன் அடிப்படையிலும், நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஏ, பி என பிரித்தும் மற்றும் கிரா-மங்களை ஒட்டிய குடி-யி-ருப்புகளை சி என பிரித்-தும் அதன் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிப்பது, வணிக ரீதியான கட்டிடங்களுக்கு தனியாக வரி நிர்ணயிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து தலைவர் உள்பட 16 கவுன்சிலர்கள் கையெழுத்-திட்டனர்.