உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பொதுத்தேர்வு எழுத 225 மையங்கள் அமைப்பு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

Published On 2022-04-12 13:40 IST   |   Update On 2022-04-12 13:40:00 IST
ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத 225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத 225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வு ஏற்பாடு களை மாவட்ட  பள்ளி கல்வித் துறையினர் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் -ந் தேதி முதல் 31-ந் தேதி தேதி வரை 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு எழுதுவதற்காக 10-ம் வகுப்பு மாணவர் களுக்கு 113 மையங்கள் அமைக்கப் பட்டு 28 ஆயிரத்து 365 மாணவர்களும், மேல்நிலைத் தேர்வு எழுத 104 மையங்கள் அமைக்கப் பட்டு அதில் பிளஸ்-1 மாணவர்கள் 27 ஆயிரத்து 656 பேரும், பிளஸ்-2 வகுப்பில் 24 ஆயிரத்து 909 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். 
தனித்தேர்வு மையமாக 10-ம் வகுப்பு மாணவர் களுக்கு 5 மையங்களம், மேல்நிலைவகுப்பு மாணவர்களுக்கு 3 தேர்வு மையங்கள் என மொத்தம் 225 தேர்வு மையங்கள் வருவாய் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து சம்மந்தப் பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய வசதிகளை செய்து கொடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Similar News