உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரச்சலூர்
பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரச்சலூர் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சுனன் நடத்த ஊசிப் பாளையம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர்.
அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நஞ்சை கொளாநல்லி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (54), ஈரோடு விளக்கேத்தி, ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்(31), காங்கேயம், நத்தக்கடையூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (35), அரச்சலூர், புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (50), பழைய கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் என்பதும் அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.1000 பறிமுதல் செய்தனர்.