உள்ளூர் செய்திகள்
புவனகிரி அருகே நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்த கழிவுப் பொருள்கள் அகற்றம்
ஊராட்சி மன்ற தலைவர் சர்குருநாதன் .ஜேசிபி மூலம் துப்புரவு பணியாளர்களை கொண்டு. கழிவுப் பொருள்களைஅகற்றி அதை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மஞ்சகுழி ஊராட்சி முட்லூர் கடலூர் செல்லும் சாலை .ஓரத்தில் நீண்ட நாட்களாக மாட்டு கறி கழிவு. ஆட்டுக் கழிவு மற்றும் மீன்கள் கழிவு போன்றவை அப்பகுதியில் தினந்தோறும் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் செல்லமே முடியாமல் இருந்தது .மேலும் துர்நாற்றம் வீசும் அவல நிலையில், 'அப்பகுதியில் யாரும் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் முடியவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்.மஞ்சக்குழி. ஊராட்சி மன்ற தலைவர். மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம் சுகுமார் ஆகியோரின் உத்தரவின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சர்குருநாதன் ஜேசிபி மூலம் துப்புரவு பணியாளர்களை கொண்டு கழிவுப் பொருள்களைஅகற்றி அதை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. கழிவு கழிவுகள் கொட்டப்பட்டதால் துர்நாற்றம் வீசுவது குறைந்து காணப்பட்டது.
மேலும் கழிவு அகற்றப்பட்ட இடத்தில் பிளீச்சிங் பவுடர் கொட்டப்பட்டது. அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.