உள்ளூர் செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்.

ஆரணி அருகே ஆட்டோ, கார் மோதி 5 பேர் படுகாயம்

Published On 2022-04-11 15:48 IST   |   Update On 2022-04-11 15:48:00 IST
ஆரணி அருகே ஆட்டோ, கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சித்தேரி கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது21) வித்யா (21), சுவாதி (22) ஆகியோர் ஆரணி டவுன் பஜார் வீதியில் உள்ள துணிகடையில் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று இரவு பணியை முடித்துவிட்டு ஓன்றாக ஆரணியிலிருந்து தனது கிராமத்திற்கு ஆட்டோவில் சென்றனர். சேத்துபட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் துந்தரீகம்பட்டு கிராமத்தின் கூட்ரோடு  அருகே வந்த போது கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சித்தேரி கிராமத்தை 3பெண்கள் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நெசல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் படுகாய மடைந்தவர்களை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீதர் சீனிவாசன் ஆகியோர் மேல்சிகிச்கைக் காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Similar News