உள்ளூர் செய்திகள்
பர்வதமலை கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காடா துணியை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது படத்தில் காணலாம்.

கலசபாக்கம் அருகே பர்வதமலை கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-04-11 15:48 IST   |   Update On 2022-04-11 15:48:00 IST
கலசபாக்கம் அருகே பர்வதமலை கோவில் உண்டியல் உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை உச்சியில் மல்லிகார்ஜுனர் உடனுறை பிரமராம்பிகை கோவில் உள்ளது.

இக்கோயிலுக்கு பவுர்ணமி நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

கோவில் சாமி சன்னதி முன்பு பக்தர்களின் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் அடிக்கடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணத்தை திருடி சென்று விடுகின்றனர். 

இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு கோவில் உண்டியல் மர்ம நபர்கள் உடைத்து. அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி பக்தர்கள் கூறுகையில்:-

பருவதமலை மீது வைக்கப்பட்ட உண்டியலில் பக்தர்கள் அதிகமாக காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அடிக்கடி உண்டியலை உடைத்து பல லட்சம் ரூபாய்களை திருடி சென்று விடுகின்றனர். 

தற்போது உடைக்கப்பட்டு உள்ள உண்டியலை வெளியில் சொல்லாமல் மறைப்பதற்காக காட்டன் துணி மூலம் திருடுபோன உண்டியலை முழுவதும் மூடி வைத்துள்ளனர். 

மேலும் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். உண்டியலை உடைத்து திருடும் சம்பவத்தை தடுக்கும் வகையில் சிசிடி கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News