உள்ளூர் செய்திகள்
நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி வாலிபர்

நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி வாலிபர் உல்லாசம்- சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு

Published On 2022-04-11 14:57 IST   |   Update On 2022-04-11 14:57:00 IST
கடலூர் முதுநகரில் நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கடலூர் முதுநகரில் வசித்து வந்தார். அப்போது கடலூர் செம்மங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் சசிகுமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. எனவே அவர் அடிக்கடி லாரி டிரைவர் வீட்டுக்கு வருவது உண்டு.

கடந்த 2018-ம் ஆண்டு டிரைவர் லாரியில் வெளி யூருக்கு சென்று இருந்தார். அப்போது டிரைவர் வீட்டுக்கு சசிகுமார் சென் றார்.

வீட்டில் லாரி டிரைவர் மனைவி குளிக்கும் சமயத் தில் ரகசியமாக சசிகுமார் வீடியோ எடுத்து வைத்துள் ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து சசிகுமார் தொடர்ந்து லாரி டிரைவர் மனைவியை நிர்பந்தப்படுத்தியும், ஆசைக்கு இணங்காவிட் டால் சமூக வலைதளங்களிலும், நண்பர்களிடமும் காட்டி அசிங்கப்படுத்து வேன் என மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக பலமுறை சசிகுமார், லாரி டிரைவர் மனைவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு இச்சம்பவம் குறித்து லாரி டிரைவருக்கு தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், சசிகுமாரை கண்டித்து அங்கிருந்து தென்காசி மாவட்டத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வசித்து வந்துள்ளார்.

தற்போது லாரி டிரைவர் மனைவி செல்போன் எண்களை சசி குமார் தெரிந்து கொண்டு மீண்டும் உல்லாசமாக இருக்க மிரட்டி வந்துள்ளார்‌. இதன் காரணமாக கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்பு புகார் அளித்த காரணத்தினால் சசிகுமார் மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீசார் விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். ஆனால் அதன் பிறகு சசிகுமார் மீண்டும் லாரி டிரைவர் மனைவியை உல்லாசமாக இருக்க அழைத்தார்.

ஆனால் லாரி டிரைவர் மனைவி வர மறுத்ததால் சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு தொடங்கி உள்ளார். பின்னர் லாரி டிரைவர் மனைவியை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதனால் லாரி டிரைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சசிகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது.

Similar News