உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

கோவையில் நடந்த விபத்தில் ஐ.டி.ஊழியர் உள்பட 2 பேர் பலி

Published On 2022-04-10 16:03 IST   |   Update On 2022-04-10 16:03:00 IST
கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை:

கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள ஆர்.ஜி.புதூரை சேர்ந்தவர் தர்மராஜ்(21). ஐ.டி.ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் அவிநாசி ரோட்டில் சென்றார். திடீரென மொபட் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் தர்மராஜின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(22). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கணபதி&சத்தி ரோட்டில் சென்றார். அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரஞ்சித் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது இதில் சம்பவ இடத்திலேயே அவர்இறந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News