உள்ளூர் செய்திகள்
குன்னூர், ஊட்டியில் 2-வது நாளாக பலத்த மழை
குன்னூர், ஊட்டியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி,
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கோடை வெயில் கொளுத்-தி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், வாய்க்கால் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.கோடை வெயில் காரணமாக பகலில் மக்கள் நடமாட்டமும் குறைந் துள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்று-ம் வெப்பசலனம் காரணமாக கோடை வெயிலுக்கு மத்தியிலும் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
கோடை வெயிலில் தகித்து வந்த மக்கள் இந்த மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற் கிடையே வெப்பச்சலனம் காரணமாக தமி-ழக-த்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையமும் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.
ஊட்டியில் காலை நேரத்தில் கடுமையான வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானம் மப்புமந்தாரமுமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, ரோஜா பூங்கா செல்லும் சாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மழை பெய்தாலும், சுற்றுலா பயணிகள் சிலர் மழையில் நனைந்த படியும், குடை பிடித்த படியும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான முத்தோரை பாலாடா, எமரால்டு, மஞ்சூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக மதிய நேரங்களில் அவ்வப்போது மூடுபனி காணப்பட்டது. நேற்று குன்னூர், மவுண்ட் ரோடு, பெட்போர்டு, மவுண்ட் பிளசண்ட், அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.கோத்தகிரி, அரவேணு, கொடநாடு, கட்டபெட்டு, சோலூர் மட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஒடைகளுக்கும், கிணறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்த மழை காரணமாக கடும் குளிரும் நிலவியது. இந்த திடீர் மழையால் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், தோட்டத் தொழிலாளர்கள் என பலரும் பாதிப்ப டைந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலை காய்கறிகள், தேயிலை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
கோவை தொண்டா முத்தூர் வட்டாரத்தில் உள்ள சாடிவயல், ஆலாந் துறை, மாதம்பட்டி, பேரூர், வடவள்ளி, மருதமலை, நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதேபோல் மாவட் டத்தில் உள்ள வால்பாறை, துடியலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மிதமான மழை பெய்தது.