உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஊட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

Published On 2022-04-10 16:02 IST   |   Update On 2022-04-10 16:02:00 IST
ஊட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் சிக்கினார்.
ஊட்டி: 

நீலகிரி மாவட்டம் ஊட்டியின் பல்வேறு பகுதிகளிலும், கல்லூரி மாணவர்கள், இளைஞ-ர்-களை குறிவைத்து சிலர் கஞ்சா விற்பனையில் ஈடு-பட்டு வருவதாக நகர மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, பெரியாநகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில், காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். போலீசார் அவர்களின் வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
 
போலீசார் அவரை துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். 
அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார் மற்றொரு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
 
விசாரணையில், கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது ஊட்டியை சேர்ந்த விவின்(21), ஊட்டி பேண்ட் லைனை சேர்ந்த விஜய்(22) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் திருப்பூரில் இருந்து கஞ்சாவை வாங்கி இங்கு கல்லூரி மாணவர்-களுக்கு விற்றதும் கண்டு-பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விவினை கைது செய்தனர். தப்பியோடிய விஜயை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா விற்க கொடுத்த வீரசிவகுமார் என்பவரை பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

Similar News