உள்ளூர் செய்திகள்
அமைச்சர் கணேசன் நேரில் ஆய்வு

திட்டக்குடி நகராட்சியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி- அமைச்சர் கணேசன் நேரில் ஆய்வு

Published On 2022-04-10 15:38 IST   |   Update On 2022-04-10 15:38:00 IST
புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட இருப்பதால் அப்பகுதியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் கூத்தப்பன்குடிக்காட்டில் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட இருப்பதால் அப்பகுதியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட கூத்தப்பன் குடிக்காடு, தி.இளமங்கலம், மணல்மேடு, திட்டக்குடி மேல வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வார்டுகளில் உள்ள குறைகளை அமைச்சர் சி.வெ.கணேசன் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் உடன் சென்றனர்.

Similar News