உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டிக்குப்பத்தை அடுத்த ஆத்திரிக்குப்பம் பகுதியில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம், போலீஸ்காரர் வெங்கடேசன் ஆகியோர் ஆத்திரிக்குப்பம் முந்திரி தோப்பில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரகாந்த், பால முருகன், சிவா ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.