உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

செய்யாறு அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-04-10 14:20 IST   |   Update On 2022-04-10 14:20:00 IST
செய்யாறு அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள பெரும்பாலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது40). இவர் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

இவருக்கு சித்திரா (30), என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 

நேற்று முன்தினம் சேட்டு பெரும்பாலையில் சபாபதி என்பவர் புளியமரத்தில் புளியம்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உலுக்கிய போது கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து சித்ரா அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Similar News