உள்ளூர் செய்திகள்
குப்பநத்தம் அணை திறக்கப்பட்ட காட்சி.

குப்பநத்தம் அணை திறப்பால் 9432 ஏக்கர் பாசன வசதி

Published On 2022-04-10 14:20 IST   |   Update On 2022-04-10 14:20:00 IST
குப்பநத்தம் அணை திறப்பால் 9432 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
செங்கம்:

குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து 47 ஏரிகளுக்கு விவசாய பாசனத்திற்காக 26 நாட்களுக்கு 578.12 மிக கனஅடி தண்ணீர் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

குப்பநத்தம் அணையில் 700 மி.கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது அடிப்படை தேவையான குடிநீர் அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்புகள் சேர்த்து 106.52 மி.கன அடி தண்ணீர் தேவை அணையில் மீதமுள்ள 593.08 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்திற்காக இருப்பு நிலையில் செங்கம் புதுப்பாளையம் கலசபாக்கம் ஒன்றியங்களில் உள்ள 47 ஏரிகளில் குறைந்த அளவு தண்ணீர் கொள்ளளவு நிரப்பும் பொருட்டு 18 நாட்களுக்கு 265 கன அடி தண்ணீரும் மீதமுள்ள 18 நாட்களுக்கு 240 கன அடி தண்ணீர் ஆக மொத்தம் 26 நாட்களுக்கு 678.12 மிக கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 கிராமங்களில் 9432 ஏக்கர் விவசாயம் பயன்பெறும் என தெரிவித்தார்.

எனவே தண்ணீரை சிக்கனமாக துறை பணியாளர்கள் அறிவுறுத்தல்களையும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சலைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலெக்டர் முருகேஷ், சி.என் அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News