உள்ளூர் செய்திகள்
கிரிவலப்பாதையில் சாலையோர மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை மரங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள்

Published On 2022-04-10 14:20 IST   |   Update On 2022-04-10 14:20:00 IST
திருவண்ணாமலை கிரிவலப்பாதை மரங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் பக்தர்கள் மனதை கவர்கின்றன.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஏராளமான மரங்கள் உள்ளன. இங்கு சீசனுக்கு பூத்துக்குலுங்கும் மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு மரங்கள் நிழல் குடை போல் உதவுகின்றன. 

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மரங்கள் முழுவதும் மலர்களாக காட்சி தரும் சில மரங்களும் கிரிவலப்பாதையில் உள்ளன. அவைகளில் தற்போது சீசனையொட்டி மரங்கள் முழுவதும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காஞ்சி ரோடு பிரியும் இடம் அருகில் சில மரங்களில் இதுபோல் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மேலும் பல மரங்களில் தற்போது மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.அது கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் அந்த வழியில் வாகனங்களில் செல்லும் மக்கள் மனதை பெரிதும் கவர்கிறது. அந்த இடம் வந்ததும் பொதுமக்கள் பலர் வாகனங்களை நிறுத்தி போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். 

மேலும் சிலர் குடும்பத்துடன் செல்பி எடுக்கின்றனர். இந்த காட்சிகளை காணும் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Similar News