உள்ளூர் செய்திகள்
மாற்று திறனாளிகள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.

ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ சான்றிதழ் கேட்டு மாற்று திறனாளிகள் முற்றுகை

Published On 2022-04-09 15:28 IST   |   Update On 2022-04-09 15:28:00 IST
ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ சான்றிதழ் கேட்டு மாற்று திறனாளிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் மாற்று திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பஸ் மற்றும் ரயில் ஆகியவற்றில் குறைந்த கட்டணத்திற்கு மருத்துவ சான்றிதழ் பெற அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் ஆரணி அரசு மருத்துவ மனையில் மருத்துவ சான்றிதழ் பெற வரிசையில் காத்திருந்தனர்.

மேலும் தலா 10 நபர்களுக்கு மட்டும் மருத்துவ சான்றிதழ் வழங்க முடியும் மற்றவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் பெற்று கொள்ள அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தன.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றுதிறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓன்றுணைந்து ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்ப முயன்றனர். 

ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் மாற்றுதிறனாளிகள் கலைந்து சென்றனர்.

பின்னர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பேசி மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வழிவகை செய்யதனர்.இதனால் ஆரணி அரசு மருத்துவ மனையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டன.

Similar News