உள்ளூர் செய்திகள்
இன்று முதல் குப்பநத்தம் அணையில் இருந்து 47 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
இன்று முதல் குப்பநத்தம் அணையில் இருந்து 47 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையிலிருந்து இன்று (9-ந்தேதி) முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்சக்சேனா நேற்று உத்தரவிட்டார்.
அதன்பேரில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று காலை குப்பநத்தம் அணைக்கு நேரில் சென்று விசை மூலம் மதகுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய புதுவெள்ளத்தில் மலர்கள் தூவப்பட்டது. முன்னதாக அணை திறக்கும் பகுதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
குப்பநத்தம் அணையில் இருந்து 47 ஏரிகளுக்கு இன்று முதல் வருகிற 27-ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நாளொன்றுக்கு 265.00 மில்லியன் கன அடி வீதம் (அதாவது 412.20 மில்லியன் கன அடி) 28.5. 2002 முதல் 5.5.2022 வரை 8 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 240 கன அடி வீதமும் (அதாவது 165.92 மில்லியன் கனஅடி) ஆக மொத்தம் 26 நாட்களுக்கு 578.12 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9,432.76 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.