உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாகன விபத்தில் மேலும் 2 பேர் பலி

Published On 2022-04-09 14:28 IST   |   Update On 2022-04-09 14:28:00 IST
வாகன விபத்தில் மேலும் 2 பேர் பலியானார்கள்
பெரம்பலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 46) ரைஸ்மில் ஊழியர். இவரது மனைவி வேதவள்ளி (40) இவர்களது மகன்கள் கிஷோர் (12) திவாகர் (6) கள்ளக்குறிச்சி தீர்த்தாலு நகரைச் சேர்ந்தவர் கதிரவன் (45) ஐ.டி.ஊழியர். கொரோனா ஊரடங்கில் ஊருக்கு வந்தவர் வீட்டிலி ருந்தே வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 3&ந்தேதி கண்ணன், இவரது மனைவி வேதவள்ளி, கதிரவன், இவரது தாய் தமிழரசி (65) தம்பி கார்முகில் (40) கதிரவனின் மகன் சந்திரவதனன் (12) கார்முகில் மகன் லிங்கநேத்திரன் (8) உள்பட 9 பேர் காரில் ஸ்ரீரங் கம் மற்றும் சமயபுரம் கோயி லில் சாமி கும்பிட வந்தனர். பின்னர் மதியம் 2 மணியள வில் ஊர்திரும்பினர். காரை கதிரவன் ஓட்டினார். 

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் இடதுபுறம் ஓவர் டேக் செய்ததால் கதிரவன் காரை வலதுபுறம் திருப்ப முற்பட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் மலையப்ப நகர் பிரிவு பாதையில் தேசிய நெடுஞ்சாலையில் வலதுபுற சாலைக்கு சென்றது.
 
அப்போது எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது. இதில் கண்ணன், கார்முகில், மற்றும் லிங்கநேத்திரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தமிழரசி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். 

விபத்தில் படுகாயமடைந்த வேதவள்ளி, கதிரவன் ஆகியோர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், கிஷோர், சந்திரவதனன் ஆகியோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தனர. 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கிஷோரும், நேற்று காலை சந்திரவதனனும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந் துள்ளது. 

Similar News