உள்ளூர் செய்திகள்
ஆரணி நகராட்சியில் ரூ.15.85 கோடி வரி பாக்கி
ஆரணி நகராட்சியில் ரூ.15.85 கோடி வரி பாக்கி உள்ளது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி 33 வார்டுகள் உள்ளன கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று. இதில் தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி என்பவர் நகரமன்ற தலைவராகவும் துணை தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பாரிபாபு என்பவர் பொறுப்பேற்றனர்.
ஆரணி நகராட்சி முதல் கூட்டம் ஆணையர் தமிழ்செல்வி தலைமை வகித்தார் பொறியாளர் ராஜவிஜய காமராஜ் அனைவரையும் வரவேற்றார்
மேலும் கூட்டத்தில் 33 வார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் தங்களின் வார்டுகளில் உள்ள குறைகளை சுட்டி காட்டி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி பேசியதாவது:-
கொரோனா காலத்தில் வரிவசூல் செய்ய முடியவில்லை தற்போது வரையில் 30சதவீதம் தான் வரி வசூல் செய்யபடுகின்றன. இதனால் ஆரணி நகராட்சி ரூ.15 கோடியே 85 லட்சம் வரி பாக்கி உள்ளது.
இதுவரையில் மின்சார வாரியத்திற்கு ரூ.4 கோடியே 50 லட்சம் கடன் உள்ளன. நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. நகராட்சி ஓப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகை வழங்க முடியவில்லை.
வருங்காலத்தில் அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் ஓன்றுணைந்து வரிவசூல் செய்து நகராட்சி கடனை அடைத்து முதன்மை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.