உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அம்ரித் மஞ்சப்பை வழங்கினார்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-நீலகிரி கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தல்

Published On 2022-04-08 15:28 IST   |   Update On 2022-04-08 15:28:00 IST
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஊட்டி: 

நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக த்தில், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-  நீலகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் சங்கங்கள் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் ஏழை, எளிய பெண்களுக்கு வாழ்க்கை தரம் உயர உதவி செய்யப்பட்டு வருகிறது.

சங்கம் வசூல் செய்யும் நன்கொடை தொகைக்கு அரசால் 1:2 என்ற வகையில் இணை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டிற்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 2008 முதல் திரட்டப்பட்ட நன்கொடை தொகை மற்றும் இணை மானியம் தொகை சேர்த்து ஒருமித்த தொகை ரூ.71,13,761-ல் 436 பயனாளிகளுக்கு ரூ.48,01,403 மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. 

சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகள் குறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

மேலும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் லோகநாதன், முஸ்லிம் மகளிர் உதவு சங்க கூடலூர் கவுரவ செயலாளர் சுலைமான், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க ஊட்டி கவுரவ செயலாளர் ஸ்டெல்லா மற்றும் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Similar News