உள்ளூர் செய்திகள்
நெல்லிக்குப்பம் அருகே நகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்- வேல்முருகன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
விழாவில் வேல்முருகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி கமிஷனர் பார்த்த சாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், பணி மேற்பார்வையாளர் வாசு, உதவி கல்வி அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி வரவேற்றார்.
விழாவில் வேல்முருகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது வேல் முருகன் எம். எல்.ஏ விடம் ஆசிரியர்கள் மின்விசிறிகள் வேண்டுமென கோரிக்கை வைத்ததை தொடர்ந்து உடனடியாக தனது சொந்த செலவில் மின் விசிறி வாங்கி கொடுத்தார்.
நிகழ்ச்சியில் த.வா.க மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், த.வா.க நகர செயலாளர் கார்த்திக், வி.சி.க நகர செயலாளர்கள் புலிக்கொடியன், திருமாறன், கவுன்சிலர்கள் ஸ்ரீதர், செல்வகுமார், மலையான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.