உள்ளூர் செய்திகள்
முதுமலை புலிகள் காப்பகம் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் உணவு உண்ணும் மான்கள்
திறந்த வெளியில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவோர் மீது வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத் துக்கு உட்பட்ட வாழைத் தோட்டம், மாவனல்ல, மசினகுடி உள்ளிட்ட கிராமப் புறங்களில் எப்போதும் மான்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் வாழைத்தோட்டம் வனப்பகுதியில் குப்பை தொட்டியில் மான் ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள உணவுகளை உண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வனப்பகுதியில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாகவும், உணவு, குடிநீருக்காக வனவிலங்குகள் ஊருக்குள் அலைந்து அலைகின்றன. இந்நிலையில் குடியிருப்புகளை ஒட்டி யுள்ள திறந்தவெளி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது.
இதனால் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடி வந்த மான் ஒன்று அதில் இ ருந்த பிளாஸ் டிக் கழிவுகளில் உள்ள உணவை எடுத்து உண்டது. உணவுடன் பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால் மான் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை
தெரிவித்துள்ளனர்.
எனவே திறந்த வெளியில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவோர் மீது வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.